Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்-கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு.


தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில்  மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சாலை விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பேசினர்.


இதில்  சாலை விதிமுறைகளை எவ்வாறு பின்பற்றுவது மற்றும் சாலையில் மாணவ மாணவிகள் நடக்கும்போது வலதுபுறம் நடக்கவும், சாலையை கடக்கும் போது சாலையின் இருபுறமும் கவனித்து பின் செல்லுதல், பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் நின்றபடி செல்லாமல் பாதுகாப்புடன் பயணிப்பது, 18 வயதுக்கு குறைவான மாணவ-மாணவிகள் இருசக்கர வாகனத்தை  இயக்கக் கூடாது, டூவீலர்களில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும்,மூன்று நான்கு பேர் பயணிப்பதால் எதிர்பாராது விபத்துக்களில் சிக்கி உடல் உறுப்புகளை இழக்க நேரிடும், இது மட்டுமல்லாது  மொபைல் போனில் பேசியப்படி டூவீலரை ஓட்டுவதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. 

விபரீதம் நடந்தால் பாதிப்பு யாருக்கு என்பதையும் மாணவர்கள் உணர வேண்டும் என  பேசினார். அதனை தொடர்ந்து மாணவ - மாணவிகளின்  சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைப்பெற்றது. ஊர்வலமானது பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தொடங்கி பேருந்து நிலையம் வரை சென்று  மீண்டும் மருத்துவமனைக்கு வந்தடைந்து.இதில் மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு வரிசையாக சென்றனர்.


இந்த நிகழ்ச்சியில் மருந்தாளுநர் முத்துசாமி காவல்துறையினர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies