Type Here to Get Search Results !

பூகானஅள்ளி‌ அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய மை தருமபுரி அமைப்பினர்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பாடி பூகானஅள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எண்ணங்களின் சங்கமம், மை தருமபுரி அமைப்பின் சார்பாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. தருமபுரி செல்வமாளிகை நிறுவனம் சார்பாக மாணவர்களுக்கு உணவு பை, எண்ணங்களின் சங்கமம் சார்பாக மாணவர்களுக்கு எழுது பேனா, நோட் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் அசோக் குமார் தலைமை தாங்கினார். ஆசிரியைகள் பிரேமா, பிரியதாருணி ஒருங்கிணைத்தனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, சமூக சேவகர் தமிழ்செல்வன் ஆகியோர் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies