Type Here to Get Search Results !

பென்னாகரம் பகுதிகளில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு.


தர்மபுரி மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பாக மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ. பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., மற்றும் சேலம் உணவு பகுப்பாய்வு வாகனம் (பொறுப்பாளர்) முதுநிலை பொது பகுப்பாய்வாளர் திருமதி. சாமுண்டீஸ்வரி அவர்கள் இருவரின் வழிகாட்டுதல் மற்றும் ஏற்பாடுகளின் படி  மாவட்டம் முழுவதும் சென்று உணவுப் பொருள்களில் கலப்படம் கண்டறிதல், தரம் அறிதல்  மற்றும் உணவு பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்த  விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. 


அதன் ஒரு பகுதியாக பாப்பாரப்பட்டி மற்றும் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி மற்றும் இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திக் உள்ளிட்ட குழுவினர்  பென்னாகரம் பகுதியில் பேருந்து நிலையம், என பல்வேறு பகுதிகளில் உணவு  பாதுகாப்பு நடமாடும் வாகனம் மூலம் விழிப்புணர்வு செய்தனர். 


பாப்பாரப்பட்டி பேருந்து நிலையப் பகுதியில் அனைத்து வணிகர் சங்க  வணிகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் உணவு பாதுகாப்பு நடமாடும் முன்பாக உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு காணொளி காட்சிகள் மற்றும் உணவு கலப்படம் குறித்து  நேரடி செயல் விளக்கம் உடன் பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து  பால், தேயிலை, உணவுப் பொருட்கள், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் எடுத்து வந்து வாகனத்தில் ஸ்பாட்டிலேயே பகுப்பாய்வு செய்து காண்பிக்கப்பட்டது. ஒரு சில பொருட்கள் தரம் குறைவானது கண்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது .


பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர்  தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் மற்றும்  ஆசிரியைகள் உள்ளிட்டோர் முன்னிலையில் உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு, உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல், உணவு பொருள் பாக்கெட் லேபில்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து நேரடி செயல் விளக்கமும், காணொளி காட்சிகள் வழியாகவும் விழிப்புணர்வு மற்றும் பிரசுரங்களும் வழங்கினர். நிகழ்ச்சியில்  மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


இருபதுக்கும் மேற்பட்ட டீத்தூள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் செயற்கை நிறம் ஏற்பட்ட பச்சை பட்டாணி, கார வகைகள், பால், நெய், மசாலா பொருட்கள் உள்ளிட்ட உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை முடிவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


விழிப்புணர்வு தொடர்ச்சியாக  மாவட்டம் முழுதும் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக  உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies