புதிய டாஸ்மாக் கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 பிப்ரவரி, 2024

புதிய டாஸ்மாக் கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகாவுக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி அருகேவுள்ள சஜ்ஜலஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட நளப்பநாய்க்கன அள்ளி கிராம மக்களே தங்கள் ஊரில் புதிய டாஸ்மாக் கடை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் நிர்வாகத்திடம் புகார் மனு அளித்துள்ளவர்கள்.

பாப்பாரப்பட்டியில் மூன்று டாஸ்மாக் கடைகள்  செயல்பட்டு வந்தது, இதில் இரண்டு கடைகள் ஏற்கனவே வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது, இந்நிலையில் பாப்பாரப்பட்டியில் நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெறவுள்ள நிலையில் பாப்பாரப்பட்டியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினை  நளப்பநாய்க்கனஅள்ளி கிராமத்திற்கு மாற்றிட தேவையான நடவடிக்கைளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது, இந்நிலையில் தங்களது கிராமத்திற்குள் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என தெரிவித்த நளப்பநாய்க்கன அள்ளி கிராம மக்கள்  தருமபுரியிலுள்ள டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரியை  நேரில் சந்தித்து தங்களது கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று குறிப்பிட்டு புகார் மனு ஒன்றினை அளித்தனர்.


மனுவை பெற்றுக் கொண்ட டாஸ்மாக் மேலாளர் நளப்பநாய்க்களஅள்ளி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட மாட்டாது என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர், டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தருமபுரியில் மெகா கல்யாண கண்காட்சி 2024, பந்தல் முதல் பந்தி வரை ஒரே இடத்தில், வரும் மார்ச் 8,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், நமது தீபா சில்க்ஸ் வளாகத்தில் நடைபெற உள்ளது. உங்களின் திருமணத்தை மேலும் சிறப்பாக்க வருகைதாருங்கள்..