மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண மாண்புமிகு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ”உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் பென்னாகரம் வட்டத்தில் வரும் 21.02.2024 அன்று காலை 09.00 மணி முதல் 22.02.2024 காலை 09.00 மணி வரை நடைபெற உள்ளது.
மேற்படி நாளில் மாவட்ட ஆட்சியர் வருவாய் வட்டத்தில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலங்களை ஆய்வு செய்ய உள்ளார் மேலும் 21.02.2024 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கள ஆய்வில் இருந்த மாவட்டத்தின் முதல்நிலை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டமும் அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு அரசு திட்டங்களை செயல்படுத்துதல் தொடர்பாக பொது மக்களிடமிருந்து கருத்துகளையும் பெற உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக