Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

முன்னாள் படைவீரர்களுக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 4 மாதகால சிறப்பு பயிற்சி. - விண்ணப்பிக்க அழைப்பு.


இந்திய இராணுவத்தில் 6 மாதகாலம் சிறப்பு உடற்பயிற்சி கல்வி பயின்ற முன்னாள் படைவீரர்களுக்கு (Basic Course in Physical Education) உடற்பயிற்சி பணிக்கு உதவிடும் வகையில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் வாயிலாக 4 மாதகாலம் சிறப்பு உடற்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

எனவே ஏற்கனவே 6+4 மொத்தம் 10 மாத காலம் பயிற்சி பெற்றால் உடற்கல்வி ஆசிரியராக பணிநியமனம் வழங்க ஏதுவாக அமையும் என்பதால் இப்பயிற்சியில் சேர விருப்பமும் மற்றும் படைப்பணியில் 6 மாத காலம் சிறப்பு உடற்பயிற்சி கல்வி முடித்த தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் உரிய ஆவணங்களுடன் தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை பெற்று பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண்:04342- 297844 தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., தனது செய்தியறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884