Type Here to Get Search Results !

அகில இந்திய துணை தொழிற் தேர்வு - மார்ச் 2024 வரும் 15ஆம் தேதி கட்டணம் செலுத்த கடைசி நாள்.


அகில இந்திய துணை தொழிற் தேர்வு - மார்ச் 2024-க்கான தேர்வு கட்டணத்தை தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற் பயிற்சி நிலையங்களில் வருகின்ற 15.02.2024 –தேதிக்குள் செலுத்தி, தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாண்டு தொழிற்பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் 2024-ல் (for Semester System only) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


எனவே, துணைத் தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற் பயிற்சி நிலையங்களை 15.02.2024 –தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக் கட்டணத்தை தொழிற் பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி செலுத்தி, இந்நல்வாய்ப்பினை பயன்படுத்தி துணைத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும், அகில இந்திய துணைத் தொழிற் தேர்வு மார்ச் 2024, குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற http://skilltraining.tn.gov.in) மற்றும் https://ncvtmis.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies