தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மற்றும் நகரத்தில் அருள்மிகு புதூர் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி 21.02.2024 ஆம்
தேதி புதன்கிழமை
பாலக்கோடு வட்டத்திற்கு மட்டும் உள்ளூர்
விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 16.03.2024 (சனிக்கிழமை)
பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை 1881-ம் ஆண்டின் செலாவணி முறிச்சட்டம், 1881 (Under Negotiable Instruments Act. 1881)- ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளான்று, பாலக்கோடு சார்நிலைக் கருவூலம், அரசு பாதுகாப்புக்கான அரசு பாதுகாப்பக்கான அவசர அலுவலகளைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக