தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள கும்மானூர் கிராமத்தை கூலி தொழிலாளியின், 14 வயது மகள் அதே பகுதியில் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்தார், இந்நிலையில் கடந்த ஜனவரி 17ம் தேதி, மாணவிக்கும் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவருக்கும் தொட்டம்பட்டி பெருமாள் கோயிலில் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து மாணவி பாலக்கோடு வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.
அவரது ஆலோசனையின் பேரில் மகளிர் ஊர் நல அலுவலர் சசிகலா உடனடியாக மாணவியை மீட்டு விசாரித்ததில் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகவும். தான் படிக்க வேண்டும் என கூறினார். இதுகுறித்து மாணவியின் தாய், திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது சசிகலா அளித்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.