தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தருமபுரி நகராட்சி இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள கிராமநிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த TNPSC-GROUP-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நூலகம் மற்றும் அறிவுசார்மையம், சந்தைப்பேட்டையில் (தருமபுரி நகராட்சி நகர்புற வீடற்ற ஏழைகள் தங்கும் இல்ல வளாகத்தில்) 01-02-2024 முதல் துவங்கவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பானது வாரஇறுதிநாட்களில் மட்டும் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். இப்பயிற்சி வகுப்பில் சேரவிருப்ப முள்ளவர்கள் இந்த https://t.ly/6rMNv இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு இவ்வலுவலக தொலைபேசி எண் 04342–296188 வாயிலாக தொடர்புகொள்ளலாம்.
இம்மாவட்டத்தில் தகுதி வாய்ந்த தேர்வர்கள் இலவச பயிற்சிவகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
.gif)

