Type Here to Get Search Results !

NDSO மகாத்மா காந்தி டியூசன் சென்டர் மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கப்பட்டது.


தருமபுரி மாவட்டத்தில் NDSO மஹாத்மா காந்தி மாலை நேர டியூசன் சென்டர் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் நாட்றாம்பாளையம், அத்திமரத்தூர், கேரட்டி ஆகிய ஊர்களில் உள்ள நூறு மாணவர்களுக்கு மேலங்கி, ஸ்கேல், பேனா, நோட் புக்ஸ் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்விற்கு மகாத்மா காந்தி மாலை நேர பயிற்சி மையத்தின் ஆசிரியர்கள் நாட்றம்பாளையம் ஆசிரியர் செந்தில்குமார், அத்திமரத்தூர் ஆசிரியை திருமதி மகாலட்சுமி, கேரட்டி ஆசிரியை திருமதி மீனா ஆகியோர் தலைமை தாங்கினார். தருமபுரி சமூக சேவை அமைப்பினர் மை தருமபுரி சதீஸ் குமார் ராஜா, தமிழ்ச்செல்வன், அருணாசலம்,முஹம்மத் ஜாபர், V4U அமைப்பின் பிரகாஷ், விஜயக்குமார், வேணுகோபால், அரவிந்த் ஆகியோர் கல்வி உபகரணங்களை வழங்கினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies