Type Here to Get Search Results !

பாலக்கோடு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி விபரங்களை பதிவேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் தமிழக அரசு டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி விபரங்களை பதிவேற்றத்தை கண்டித்து வட்டத் தலைவர் மாதேஷ் தலைமையில் கண்ட  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சாம்ராஜ் முன்னிலை வகித்தனர்.

இதில் கிராம பஞ்சாயத்துகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு பருவங்களில் விளைவிக்கப்படும் பயிர், விவசாய முறைகளை துல்லியமாக அறிந்து, அதற்கேற்ப பயிர் பாதுகாப்பு திட்டங்களை மேற்கொள்ள, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிர் சாகுபடியை ஆவணப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உட்பட, 12 மாநிலங்களில், முன்னோடி திட்டமாக இதை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


தற்போது தமிழகத்தில், டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி விபரங்களை பதிவேற்றம் செய்து, ஆவணப்படுத்தும் பணியை, வருவாய்த் துறையினர் வாயிலாக மேற்கொள்ள தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஏற்கனவே பணிச்சுமை அதிகமாக உள்ளதாகவும், அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாத பணியினை வருவாய் துறைக்கு பயனில்லாத பணியினை வலுக்கட்டாயமாக செய்ய வற்புறுத்தும் போக்கினை கண்டிக்கும் விதமாகவும், டிஜிட்டல் சர்வே பணியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்பட்டத்தில் வட்ட செயலாளர் சின்னசாமி, வட்ட பொருளாளர் கலைச்செல்வன் மற்றும் கிளை நிலை அலுவலர்கள் என 45க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies