Type Here to Get Search Results !

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கிராமங்கள் தோறும் உறுப்பினர் சேர்க்கை தீவிர படுத்த வேண்டும் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா வேண்டுகோள்.


விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர்  தொல்.திருமாவளவன் அவர்களின் ஆணைக்கினங்க விடுதலை சிறுத்தைகள் கட்சி அடுத்து கட்ட பாச்சலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதுஅனைத்து தரப்பு மக்களும் நம்மை உற்று கவனித்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் ஊடகவியலாளர் நண்பர்களும் சமீபத்தில் நடந்த வெல்லும் சனநாயக மாநாடு   பற்றி மிகவும் பிரமித்துப் போய் இருக்கிறார்கள்.

அன்றைய தினம்  கட்சியின் தேர்தல் ஆலோசகர் ஆதவ்அர்ஜூன்   முயற்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கான இணைய தளம் தொடங்கப்பட்டது, எனவே தர்மபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முண்ணனி பொறுப்பாளர்கள்  வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கிராமத்தின் முகாம் செயலாளர் உட்பட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களது  கிராமத்தில் உள்ள மகளிர்  ஆண்கள்  இளைஞர்  அனைவரையும் ஒன்றினைந்து  கட்சியின் ஆன்லைன் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.


கட்சியின் கட்டமைப்பை வலுபடுத்த  ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை கட்டாயம் நாம் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். ஆகவே நிர்வாகிகள் முகவர்கள் பெண்கள் இப்பணியை  வேகமாக  செய்து முடிக்குமாறு  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் பதிவு செய்யும் உறுப்பினர்களின் சேர்க்கையை எனது வாட்செப்  எண்ணிற்கு அனுப்பவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா  கூறியுள்ளார் .

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies