மை தருமபுரி அமைப்பின் சார்பாக ஆதரவற்று இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியினை மை தருமபுரி அமரர் சேவை என்கிற அமைப்பு கடந்த இரண்டு ஆண்டாக தருமபுரியில் செய்து வருகின்றனர். மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேட்ரப்பட்டி கிராமத்தில் ஆதரவற்ற நபர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவரை குறித்து விசாரித்ததில் இவருக்கு சொந்தங்கள் எவருமில்லை என தெரியவந்தது, மொரப்பூர் காவல் நிலைய தலைமை காவலர் முருகன், முதல்நிலை காவலர் கோகுலகண்ணன், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், சந்திரசேகர், விஜயகாந்த், அருண் பிரசாத் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 75 ஆதரவற்று இறந்த புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.gif)

