Type Here to Get Search Results !

அரூர் அருகே 6000 அடி உயரமான பாறை மீது 62- கிராம பழங்குடி மக்கள் பொங்கல் விழா.


தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சித்தேரி மலை கிராமம் உள்ளது. தரை மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்தில் உள்ளது சித்தேரி ஊராட்சி 62- கிராமங்கள் உள்ளன இவை அனைத்தும் மலை மீது அமைந்துள்ளது. 

இங்கு மக்கள் தொகை சுமார் 20 ஆயிரத்துக்கு பேர்கள் இருப்பார்கள் இவர்கள் அனைவரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தொழில் மழையை நம்பி விவசாயம் செய்து வருகிறார்கள்.  ஆண்கள் கூலி வேலைக்கு எஸ்டேட் வேலை தேடி கர்நாடகா. கேரளா. கோவை .திருப்பூர். ஆகிய பகுதிகளுக்குச் சென்று பண்டிகை காலங்களில் வருவார்கள் வழக்கமாக நடந்து வருகிறது.


இந்த நிலையில் பொங்கல் முன்னிட்டு சித்தேரியில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அழகூர் செக்கம்பட்டி கிராமத்தில் 6000 அடி உயரம் கொண்ட ஒரே பாறை அமைந்துள்ளது. நான்கு கிலோமீட்டர் தூரம் மலை ஏறி சென்றால்தான் அருள்மிகு கரிய பெருமாள் வெங்கட்ராமன் சாமி கோவில் உள்ளது. இம்மலை பெயர் போட்ட மலை என்று அழைக்கிறார்கள்


சித்தேரி பஞ்சாயத்தில் உள்ள 62 கிராமத்திற்கும் தலைவர்என்றும் அழைக்கப்படும் லட்சுமண குரு. தலைமையில்.பூபாலன் மந்திரி கவுண்டர் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது. இவர்களிடம் கேட்டபோது இங்குள்ளவர்கள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் எங்கள் குல வழக்கப்படி இந்த போட்ட மலையில்தான் எங்கள் முன்னோர்கள் பல தலைமுறைகளாக முன்பிருந்து ஆண்கள். பெண்கள். கங்கணம் கட்டி பத்து நாட்கள்  கட்டி விரதம் இருந்து.


தை மாதம் மூன்றாம் நாள் கரிநாள் இன்று 62 கிராம பொதுமக்கள் அனைவரும் மலை மீது உள்ள கரிய பெருமாள்சாமிக்கு பொங்கல் வைத்து. பூஜை செய்து சாமியை தூக்கி மலை மீது சுற்றி விளையாட்டு விட்டு பெண்கள் கும்மியடித்து பாட்டு பாடி மகிழ்வார்கள். இந்த விழாவிற்கு சித்தேரி மலை. ஏற்காடு மலை. பச்ச மலை. வத்தல் மலைஆகிய பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள்.


அந்தந்த கிராமத்தின் ஊர் கவுண்டர்கள் பெருதான காரர்கள்.. மற்றும் சித்தேரி தலைவர் கோவிந்தம்மாள் சண்முகம்  கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies