Type Here to Get Search Results !

பாலக்கோடு சர்க்கரை ஆலையில் கரும்புலாரி உரிமையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள திம்மம்பட்டி பகுதியில் தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. கரும்பு அரவைக்கு தேவையான கரும்புகளை லாரி உரிமையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில், லாரிகளில் கரும்புபாரங்களை ஏற்றி வருகின்றனர். விவசாயிகள் தங்களுடைய சொந்த டிராக்டரில் கரும்புகளை ஏற்றி வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர் யோகவிஷ்னு விதிமுறைகளை மீறி விவசாய பயன்பாட்டிற்க்கு மட்டும் பயன்படுத்த கூடிய டிராக்டர்களை வணிக நோக்கில் கரும்புகளை ஏற்றி வர அனுமதி அளித்துள்ளார். இதனை கண்டித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கரும்பு லோடு ஏற்றி வராமல் கடந்த 4 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஆலைக்குள்ளேயே சமையல் செய்து சாப்பிட்டு  வருகின்றனர்.

இதுகுறித்து லாரி உரிமையாளர் சங்க தலைவர் முருகேசன்  கூறியதாவது. நாங்கள் முறையாக காலாண்டு வரி, எப்.சி. பர்மிட் உள்ளிட்ட அரசின் அனைத்து சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு வாகனத்தை இயக்கி வருகிறோம். ஆனால் டிராக்டர் உரிமையாளர்களிடம் இலஞ்சம் பெற்று கொண்டு, எந்தவித வரியும் கட்டாமல் சொந்த பயன்பாட்டிற்க்கு என  அனுமதி பெற்ற டிராக்டர்களை வைத்து ஆலை நிர்வாகம் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளதாகவும், மேலும் மலைப் பகுதி, சாலை வசதி இல்லாத இடங்களுக்கு மட்டும் எங்களுக்கு கரும்பு ஏற்ற அனுமதி வழங்கி விட்டு, கரும்பு ஆலைக்கு அருகில் மற்றும் தார்சாலை உள்ள பகுதிகளுக்கு டிராக்டர்களுக்கு அனுமதி வழங்கி வருவதாகவும், டிராக்டர்கள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அளவுக்கு அதிகமாக கரும்பு பாரம் ஏற்றி வருகின்றனர்.


ஆலை நிர்வாகம் தொடர்ந்து லாரி தொழிலாளர்களிடம் விரோத போக்கை கடைபிடித்து வருகின்றன. இதனால் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், கிளினர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் என 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 45 ஆண்டுகளாக கரும்புகளை ஏற்றி வந்து ஆலைக்கு  தருகிறோம். எனவே உடனடியாக சட்டவிரோதமாக டிராக்டர்களுக்கு கரும்பு லோடு ஏற்ற அனுமதி அளித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies