தர்மபுரி மாவட்டம் அரூர் சிறப்புநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது இப்பகுதியில் தூய்மை பணியாளராக 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரூர் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் இந்திராணிதனபால் துணை தலைவர் சூர்யாதனபால் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் முல்லைரவி துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி பேரூராட்சி உறுப்பினர் ஜெயலட்சுமி சூர்யாவெங்கடேசன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
.gif)

