தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உட்கட்டமைப்பு, மருத்துவ கருவிகள் மற்றும் வாகனங்கள் என மொத்தம் 178 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தொப்பூர், கட்டமேடு பகுதியில் புதிய அவசரகால சிகிச்சை மையம், மாவட்ட நுண் உயிரியல் ஆய்வக கட்டடம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் முன்வைக்கபட்டது. அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த இணை இயக்குநர் ஊரக நலப்பணிகள் அவர்களால் பல்வேறு தீர்மானங்கள் எடுத்துரைக்கப்பட்டது.
வட்டார அளவில் மக்கள் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை துணை இயக்குநர் சுகாதார பணிகள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்களுடன்: கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியாக பஞ்சாயத்து தலைவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் கலந்துரையாடப்பட்டது. இதனை இொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வாக்காளர்களின் உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி ஆப. அவர்கள் தலைமையில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக. வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப. அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்கள். இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து தொடங்கி தருமபுரி-சேலம் பிரதான சாலை வழியாக பாரதிபுரம் சென்றடைந்தது.
இந்நிகழ்வுகளின் போது, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வே.சம்பத்குமார், தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.கே.ஆர்.ஜெயந்தி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திரு.பெ.நாகராஜி, தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.தாமோதரன், வட்டாட்சியர் (தேர்தல்கள்) திரு.அசோக்குமார், உதவி இயக்குநர் நெடுஞ்சாலைத்துறை திரு.ஜெயசங்கர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

