தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த குண்டங்காடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும், கோயில் முன்பு பொங்கல் பண்டிகையன்று பொங்கல் வைத்து கொண்டாடடுவது வழக்கம்.
தற்போது கிராம மக்கள் இரண்டு பிரிவாக பிரிந்து விழா நடத்த முடிவு செய்ததால், இரு தரப்பிற்க்கும் இடையே முதலில் யார் பொங்கல் வைப்பது என்பது குறித்து தகராறு ஏற்பட்டது. இது குறித்து பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் நடைப்பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் தாங்கள் தான் முதலில் பொங்கல் வைத்து பூஜை செய்வோம் என தெரிவித்தனர்.
இரண்டு தரப்பிற்க்கும் சமரசம் ஏற்படாததால் மேலும் சட்டம் ஒழுங்கு ஏற்படாமல் இருக்க மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்க்கு கொண்டு இது குறித்து கொண்டு செல்வதாக தாசில்தார் ஆறுமுகம் தெரிவித்தார். தோல்வியில் முடிந்த அமைதி பேச்சுவார்த்தையால் இந்த ஆண்டு திருவிழா நடக்குமா என அக்கிராம மக்கள் எதிர்பார்ப்பு.