Type Here to Get Search Results !

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இளைஞர்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்கள்.


முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட இளைஞர்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்கள்.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட இளைஞர்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (13.01.2024) மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.


அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி மாவட்ட பெண்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் இன்றையை தினம் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் 14.01.2024  நாளை காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. இக்குழு விளையாட்டுப் போட்டிகளில் 17 வயதிற்கு மேற்பட்ட தருமபுரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கபாடி, கையுந்துபந்து மற்றும் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட விளையாட்டு - இளைஞர்நலன் அலுவலர் திருமதி. தே. சாந்தி, தருமபுரி வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வம், வீரர்கள்/வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884