மேலும் தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் 2 நிரந்த ஆதார் சேவை மையங்கள் செயல்படுகின்றன. மேலும் முகவரி மாற்றம் செய்ய பொதுமக்கள் மை ஆதார் என்ற இணையதளத்திலும் விண்ணபிக்கலாம்.
தற்போது அரூர் வட்டம் தீர்த்தமலை உள்வட்டத்திற்குட்பட்ட நரிப்பள்ளி, பெரியாப்பட்டி, டி.அண்டியூர், வேடகாட்டமடுவு, பையர்நாயக்கன்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், எஸ்.தாதம்பட்டி, வேப்பம்பட்டி, செல்லம்பட்டி, கிள்ளானூர், பொய்யப்பட்டி, ஈட்டியம்பட்டி, வீரப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட 14 வருவாய் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயனடையும் வகையில் புதிய ஆதார் அட்டை பெறவும், ஆதார் விவரங்களை திருத்தம் செய்யவும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்(1&071) மூலம் சிறப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரூர் வட்டம், தீர்த்தமலை, பாரத் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள சமுதாய கூடத்தில் வருகின்ற 22.01.2024 (திங்கட்கிழமை), 23.01.2024 (செவ்வாய்க்கிழமை), 27.01.2024 (சனிக்கிழமை), 28.01.2024 (ஞாயிற்றுக்கிழமை), 29.01.2024 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஆதார் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
மேற்படி சிறப்பு முகாமிற்கு வரும் பொதுமக்கள் ஆதார் புதுப்பித்திட தேவையான ஆவணங்களான
- வாக்காளர் அடையாள அட்டை
- குடும்ப அட்டை,
- ஓட்டுநர் உரிமம்,
- பான் கார்டூ,
- வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புதுப்பித்தல் கட்டணம் ரூ.50.00
ஆகியவற்றுடன் தங்களின் ஆதார் சேவைகளை தீர்த்தமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள்
தெரிவித்துள்ளார்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தருமபுரி மாவட்டம்.
.gif)

