மாரண்ட அள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்ட மஞ்சுவிரட்டு விழா விமர்சியாக நடைபெற்றது. மாரண்டஅள்ளி நகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா விமர்சையாக நடைபெறும் அதனையோட்டி நேற்று நடந்த மஞ்சுவிரட்டு விழாவில் மாரண்ட அள்ளி வேங்கு தெரு, சந்தை வீதி, பை-பாஸ் ரோடு, ஆணங்கிணற்று தெரு,கோட்டை மேட்டுத்தெரு, முகமதியர் தெரு, செவித்தியம் பட்டி, மற்றும் சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்தும் அழைத்து வரப்பட்ட மாடுகளுக்கு முதலில் பேருந்து நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் பூஜைகள் இடப்பட்டு கடைவீதி வழியாக அழைத்து வரப்பட்டு நான்கு ரோட்டு பகுதியில் இருந்து வெள்ளிச்சந்தை ரோடு வழியாக மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் கலந்து கொண்டு வேகமாக ஓடிய மாடுகளை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிடிக்க முற்பட்டனர் இதில் 10 க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு லேசான காயங்கள் எற்பட்டது. பாதுகாப்பு பணியில் மாரண்டஹள்ளி போலீசார் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுருந்தனர்.
.gif)

