தர்மபுரி அடுத்து அதியமான் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தட்சணகாசி காலபைரவர் கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறும், பைரவரை தரிசனம் செய்வதற்காக உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இன்று பைரவர் ஜெயந்தி காலாஷ்டமி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பைரவரை தரிசனம் செய்தனர். இங்கு வரும் பக்தர்களுக்கு உழவார பணிக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான ஏற்பாட்டினை பிரபாகரன், சாய் ஆறுமுகம், முத்து, வெற்றி, துரை முருகன், முருகன், சண்முகம், லோகு, ரங்கநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உழவார பணிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர்.