திருச்சியில் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும். வெல்லும் ஜனநாயகம் மாநாடு தொடர்பாக வாகனங்கள் ஏற்பாடுசெய்வது, விளம்பரங்கள் எழுதுவது, மக்களை அழைத்து செல்வது குறித்து மாவட்ட, ஒன்றிய, முகாம் நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வரும்டிசம்பர் 15ஆம் தேதிக்குள் எத்தனை வாகனங்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
6.12.2023 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள், பாபர் மசூதி இடிப்பு நாள் இதனை நினைவு கூறும் வகையில் சமூக நல்லிணக்க நாளாக கடைபிடித்து வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்று தலைவர் வழிகாட்டி உள்ளார். ஆகையால் மாவட்ட ,ஒன்றிய, முகாம் நிர்வாக பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என மண்டலத்தின் சார்பாக தர்மபுரி, இருஷ்ணகிரி மண்டல செயலாளர் தமிழ்அன்வர் அறிக்கை விடுத்துள்ளார்.