Type Here to Get Search Results !

வடகரை கிராம மக்கள் தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வடகரை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில் எங்கள் கிராமங்களில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறோம் எங்கள் ஊரில் பெரிய அளவில் வாழ்வாதாரமும் தொழில் நிறுவனங்களும் இல்லாத காரணத்தினால் வேறு ஊருக்கு சென்று கூலி வேலை செய்து வந்ததாகவும். 2019 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் அரசு அனுமதியுடன் தனியார் குவாரி மற்றும் கிரஷர் செயல்பட தொடங்கியது. இந்த நிறுவனத்தின் மூலம் எங்கள் ஊரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலைக்கு செல்கிறோம். 


கிராமத்தின் அருகில் இயங்குவதால் எங்களது வாழ்வாராம் மேம்பட்டுள்ளது. இதனை கெடுக்கும் வகையில் சில மர்ம நபர்கள் அந்த நிறுவனத்தில் கட்டப்பஞ்சாயத்து மாமூல் கேட்டு மிரட்டுவதாகவும் கம்பெனி பாதையை மதிப்பது கம்பெனி உள்ளே புகுந்து வேலைக்கு வரும் ஆட்களை வேலைக்கு செல்லக்கூடாது என மிரட்டல் விடுகின்றனர் இது குறித்து ஏற்கனவே கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


எனவே கம்பெனியிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடனும் ஊருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கிலும் செயல்படும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies