Type Here to Get Search Results !

சின்னப்பளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க பென்னாகரம் கிளை மாநாடு நடைபெற்றது.


தமிழ்நாடு அறிவியல் இயக்க பென்னாகரம் கிளை மாநாடு சின்னப்பளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்டத் தலைவர் மா. பழனி தலைமையில் நடைபெற்றது.

அறிவியல் மக்களுக்குக்கே, அறிவியல் சுய சார்பிற்கே என்ற முழக்கத்துடன் "சமூக மாற்றத்திற்கான அறிவியல்" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த கருத்துக்களை பரப்புதல் மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளை களைதல் போன்றவைகளை உள்ளடக்கி மாநாடு நடைபெற்றது.


முன்னதாக இம்மாநாட்டிற்கு வருகை புரிந்த அனைவரையும் அறிவியல் இயக்க செயல்பாட்டாளர் A. கதிர்வேல் வரவேற்றார். மாநாட்டின் நோக்கம், எதிர்கால செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் பற்றி மாவட்ட செயலாளர் P. துரைராஜ் விளக்கினார். இம்மாநாட்டில் ஏரியூர் கிளை பொறுப்பாளர்கள் உதவி பேராசிரியர் நா. நாகராஜ்,  மருந்தாளுநர் த. சந்தோஷ் குமார், சமூக செயல்பாட்டாளர் மு.பிரேம்குமார், உதவி பேராசிரியர் கனகராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.


பென்னாகரம் வட்டகிளையின் தலைவராக A. ஆறுமுகம், செயலாளராக A. கதிர்வேல் பொருளாளராக M.காவியா துணைத் தலைவராக கே. முத்து  துணைச் செயலாளராக C. ஜெயந்தி செயற்குழு உறுப்பினராக ஹரிகரன், முருகன் பிரியா, மங்கம்மாள், சுசிலா, நந்தினி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies