தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்திருக்கும் ஆவின் பாலகம் அமைந்துள்ளது, இந்த பாலகத்தில் ஆவின் பொருட்களை மட்டும் விற்க வேண்டும் என்பது துறை ரீதியான விதி, ஆனால் இங்கு தனியார் நிறுவன குடிநீர் பாட்டில், கடையில் இருந்து வாங்கி வரும் பன், வறுக்கி போன்ற பொருட்களை அதிக விலைக்கு விற்கின்றனர்.
நோயாளிகளின் உறவினர்கள் இந்த பாலகத்தில் பொருட்களை வாங்கும்போது மீதி சில்லறை இல்லை என கூறி இந்த பொருட்களை காட்டாயப்படுத்தி விற்றுவிடுகின்றனர் என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் இந்த பாலகத்திற்கு அரசு மருத்துவமனைக்கு வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் இருந்து மின்சார இணைப்பை பயன்படுத்துகின்றனர் என பொதுமக்கள் கூறுகின்றனர், இது குறித்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் விசாரித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.