Type Here to Get Search Results !

காரிமங்கலம்‌ பெரிய கோடியானஅள்ளி கிராமத்தில் மின் கசிவால் தீ பற்றி வீடு எரிந்து நாசம் . விவசாயிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நேரில் சென்று ஆறுதல் கூறி நல திட்ட உதவி வழங்கினார்.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் ஜக்க சமுத்திரம் ஊராட்சி பெரிய கோடியான அள்ளி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி மாதேஷ் (வயது 35) நேற்றிவு இவரது குடிசை வீடு திடிரென தீ பற்றி எரிந்தது, உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினர் வருவதற்க்குள் தீ மளமளவென பரவி குடிசை முற்றிலும் எரிந்து சேதமானது, அத்துடன் வீட்டில் இருந்த துணிமணிகள், உணவு தானியங்களும் தீயில் கருகின, மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். தகவலறிந்த ஜக்க சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் அவர்கள் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று விவசாயி மாதேசுக்கு ஆறுதல் கூறியதுடன் 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 50 கிலோ அரிசி வழங்கினார்.


கிராம நிர்வாக அவவலர் காரிமங்கலம்  வருவாய் துறை சார்பில் 3 ஆயிரம் ரூபாய் வழங்கினார், அது சமயம் கவுன்சிலர் முனிராஜ், அதிமுக விவசாய சங்கத் தலைவர் வடிவேல் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஜெகதீசன், முருகன், முனிராஜ், ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies