நிகழ்விற்கு இராமகொண்ட அள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெ.தயாநிதி தலைமை வகித்தார், பள்ளியின் தமிழாசிரியர் ஞா.சுப்ரமணி வரவேற்புரை வழங்கினார். உதவி தலைமையாசிரியர் கு.இரவிச்சந்திரன் , சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் து.முத்துக்குமார் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர்கள் தே.இளையராஜா, எம்.இராஜா, பொருளாளர் பி.குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் தமிழ்மாமணி நா.நாகராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இர.கலைவாணி துணைத் தலைவர் இரா.தங்கமணி மற்றும் உறுப்பினர் மா.சுகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக ஏரியூர் காவல் ஆய்வாளர் வெ.யுவராஜன் பங்கேற்று 300 மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினார்.
நிறைவாக பட்டதாரி ஆசிரியை த.இளமதி நன்றி கூறினார்.
நிகழ்வில் ஆசிரியர்கள் சி.மாராகவுண்டர் , ச.சுரேஷ்குமார் , மா.கர்ணன் ,கோவிந்தராஜ், முரளி ,ரம்யா, சுகுமார் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மா.கிருஷ்ணன் ,இரா.இரகுராமன் , கோ.வைரம் ,அ.குமார் பலர் கலந்துகொண்டனர்.