Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் ஏ.ஆர்.டி.எஸ். தொண்டு நிறுவனம் வட்ட சட்ட பணிகள் குழு இணைந்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சட்ட விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, எம்.ஜிரோட்டில் உள்ள ஏ.ஆர்.டி.எஸ். தொண்டு நிறுவணத்தில் ஏ.ஆர்.டி.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் பாலக்கோடு  வட்ட சட்ட பணிகள் குழு இணைந்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சட்ட விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி தொண்டு நிறுவன இயக்குநர் ஆனந்தன் தலைமையில் இன்று நடைப் பெற்றது.

இந்நிகழ்ச்சியில்  பாலக்கோடு வட்ட சட்ட பணிகள் குழு சட்ட ஆலோசகர் சின்னசாமி, பாலக்கோடு அரசு மருத்துவமனை எச்.ஐ.வி.ஆலோசகர் முருகன், வங்கி ஆலோசகர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 20க்கும் மேற்பட்ட எச்.ஐ.வி நோயாளிகளுக்கு அரிசி, பருப்பு, சத்தான தானியங்கள் உள்ளிட்ட 15ஆயிரம் மதிப்பிலான  தொகுப்பினையும் வழங்கி மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.


அதனை தொடர்ந்து நிலம் சம்மந்தமாக பட்டா, சிட்டா பெயர் மாற்றம், நிலஆக்கிரமிப்பு, குடும்ப அட்டை, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த பிரச்சனை குறித்தும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன ஊழியர்கள், வங்கி அலுவலர்கள், வட்டசட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies