Type Here to Get Search Results !

அரூர் அருகே நடத்தையில் சந்தேகம் மனைவியை தூண்டுதுண்டாக வெட்டி கொண்டவருக்கு ஆயுள் தண்டனை, தருமபுரி மகளிர் கோர்ட் தீர்ப்பு.


அரூர் அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவனுக்கு தர்மபுரி மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது 


தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம்  டி.ஆண்டியூர்  அருகே ஆலங்குட்டை பகுதியை சேர்ந்தவர் கவிபாரதி  (37) இவரது மனைவி செல்வி (35) இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் இருவரும் திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தனர் இடையில் கவிபாரதி மட்டும் குழந்தைகளுடன் சொந்த ஊர் திரும்பினார் செல்வி மட்டும்  திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்தார்.


இந்நிலையில் மனைவியின் நடத்தை மீது கவிபாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டது இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செல்வியின் தந்தையின் துக்ககாரியம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்வி சொந்த ஊருக்கு வந்தார் அப்போது அவர் திடீரென மாயமானார்.


இது குறித்து செல்வியின் தாயார் காசியம்மாள் கோட்டப்பட்டி போலீசில் புகார் அளித்தார் போலீசார் விசாரணையில் செல்வியை அவரது  கணவர்  கவிபாரதி கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சாக்கு முட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசியது தெரிய வந்தது  இது தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கவிபாரதி கைது செய்தனர் இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக கல்பனா ஆஜராகி வாதாடி வந்தார் வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது இதில் குற்றம் சாட்டப்பட்ட கவிபாரதிக்கு ஆயுள் தண்டனையும் 10ஆயிரம்  அபராதமும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884