Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

”மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.


தருமபுரி நகராட்சி, மதிகோண்பாளையம், KPJ திருமண மண்டபத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.12.2023) தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து அரசின் சேவைகளை மக்களுக்கு விரைவாகச் சேர்த்திட முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சிகளில் ”மக்களுடன் முதல்வர்” எனும் திட்டம் இன்று தொடங்கிவைக்கப்பட்டு, பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.


இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி, மதிகோண்பாளையம், KPJ திருமண மண்டபத்தில் முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.


இன்றைய தினம் தருமபுரி நகராட்சி, மதிகோண்பாளையம், KPJ திருமண மண்டபத்தில் நடைபெறும் முகாமில் தருமபுரி நகராட்சிக்கான 1,2,3,4,5,6 வார்டுகளின் பொதுமக்களிடமிருந்தும், பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெறும் முகாமில் பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்தும், பாலக்கோடு வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெறும் முகாமில் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்தும் இத்திட்டத்தின் கீழ் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது.


இம்முகாம்களில் இலவச வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பான மனுக்கள் தவிர்த்து மின்சார துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, கூட்டுறவு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, காவல் துறை, மாற்றுதிறனாளி நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுதொழில்கள் துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட 13 துறைகளுக்கான தனித்தனி அரங்குகள் அமைக்கப்பெற்று, அந்தந்த துறைகளுக்கு தொடர்பான மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படுகிறது. மனுக்களை பதிவுசெய்து, அதற்கான விண்ணப்ப இரசீது பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.


மனுக்களை பதிவு செய்வதற்கு தேவையான கணினி, பிரிண்டர் உள்ளிட்ட வசதிகளை போதுமான அளவில் ஏற்படுத்தப்பட்டும், மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களை ஏவ்வித சிரமமும் இன்றி வழங்க ஏதுவாக அடிப்படை வசதிப்பணிகளும் முறையாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி மாவட்டத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று 30 தினங்களுக்குள் தீர்வுகாணும் வகையில் முதற்கட்டமாக நகர்புற உள்ளாட்சிகளில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் இன்று முதல் 27.12.2023 வரை பல்வேறு இடங்களில் முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்பட்டு, மனுக்கள் பெறப்படுகிறது.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர்மன்றத் தலைவர் திருமதி.இலட்சுமி நாட்டான் மாது, நகர்மன்ற துணைத்தலைவர் திருமதி.அ.நித்யா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கீதாராணி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திரு.முகம்மது நசீர், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சையது ஹமீத், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, தருமபுரி நகராட்சி ஆணையாளர் திரு.சோ.புவனேஸ்வரன், தருமபுரி வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.லோகநாதன், திருமதி.மா.சத்யா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies