Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும், தருமபுரியில் அன்புமணிராமதாஸ் தலமையில் ஆர்பாட்டம்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாமக மாநிலத்தலைவர் அன்புமணி ராமதாஸ் தலமையில் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.


விவசாயிகள் பயன்பெறும் வகையிலான திட்டங்களுள் ஒன்றான தருமபுரி - காவிரி  உபரி நீர் திட்டத்தை  நிறைவேற்ற வேண்டும் என்பது தருமபுரி மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் நீ்ண்ட கால கோரிக்கையாக உள்ளது, இந்த திட்டத்தினை நிறைவேற்றிட உனடியாக நிறைவேற்றிட வேண்டுமென வலியுறுத்தி பாமக மாநிலத்தலைவர் அன்புமணிராமதாஸ் தலமையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது.


தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை  நிறைவேற்றிட வலியுறுத்தி முழக்கமிட்டபடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர், பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர், ஜி.கே. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்டேஸ்வரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் என ஆயிரகணக்கிலான பாமகவினர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


ஒகேனக்கல் காவிரியாற்றிலருந்து உபரி நீரை, தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளை நிரப்புவதால், ஆண்டு முழுவதுமே தண்ணீர் பஞ்சம் ஏற்படாத நிலை ஏற்படும் போது, இந்த மாவட்டத்தில் விவசாயம் செழிக்கும், வறட்சி மாவட்டமாக கூறப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதுமே விவசாய பணிகள் நடைபெறும், வேலை தேடி பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் இடம் பெயர்வோரின் நிலமை மாறி,  வருடம் முழுவதும் விவசாய பணிகள் கிடைக்கும், விவசாயம் செழிக்கும், விவசாயாகளுக்கும் பொது மக்களும் பயனுள்ளதாக அமையும் தருமபுரி - காவரி உபநீர் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்பதே அனைவரது நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.


கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்குள் வந்து சேரும் காவிரி நீரானது, முதலில் தருமபுரி மாவட்டத்திலே நுழைந்த பிறகே, மற்ற மாவட்டங்களுக்கே சென்றாலும் கூட இந்த மாவட்ட விவசாயிகளுக்கு தற்போது வரை எந்தவித பயனுமில்லாத நிலையே உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies