Type Here to Get Search Results !

பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அருகே தலையில் வெட்டு காயங்களுடன் விவசாயி சடலமாக மீட்பு- போலீசார் விசாரணை.


தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த  புதுப்பேட்டை கிராமத்தை  சேர்ந்த விவசாயி நாகராஜன் (50)  இவர் இன்று காலை தனது விவசாய தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி தனது மோட்டார் சைக்கிளில் சென்றவர்  நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவரை தேடி அவரது  குடும்பத்தினர் தோட்டத்திற்க்கு சென்றனர்.

தோட்டத்திற்க்கு செல்லும் வழியில் நாகராஜன் தலை, கழுத்து பகுதியில் வெட்டுப்பட்டு,இரத்த வெள்ளத்தில் சடலமாக  கிடந்துள்ளார், இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு  பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


மேலும் மோப்ப நாய் மற்றும் தடவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்க்கு வந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் கொலை சம்பவம் குறித்து விரைந்து விசாரிக்க பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து தலைமையில் தனிப்படை அமைத்துள்ளதாக தெரிவித்தார்.


இக்கொலைக்கு முன் விரோதம் காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் இக்கொலையில் யார் ,யார் ஈடுபட்டுள்ளனர் எனவும்  தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies