சுண்டாங்கிபட்டி சமத்துவபுரத்திலுள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு திராவிடர்கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 50வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திராவிடர் கழக காப்பாளர் விடுதலை அ.தமிழ்ச்செல்வன், திக மகளிரணி மாநில அமைப்பாளர் தகடூர் தமிழ்செல்வி, பகுத்தறிவாளர் கழகதலைவர் எஸ்.ராஜேந்திரன், ஆசிரியரணி தீ.சிவாஜி, சிந்தை. மூ.சிவக்குமார், புலவர். க.அசோகன், ராவணன் இனமுரசுகோபால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


