Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி அடுத்த எக்காண்டஅள்ளி கிராமத்தில் பெண்கள் இணைப்புகுழு சார்பில் பாரம்பரிய விதை திருவிழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்.


தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த எக்காண்டஅள்ளி கிராமத்தில்  தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு நடத்தும் பாரம்பரிய விதை திருவிழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடந்தது. இதில் பெண்கள் கேழ்வரகு, பனிவரகு, திணை. சாமை. வரகு, கம்பு, சோளம். அரிசி. கோதுமை ஆகியவற்றை மண்பானை மூலம் ஊர்வலமாக கொண்டு சென்றும், சிறுதானியங்களை  குறித்து விழிப்புணர்வு கிராமிய பாடலுக்கு கும்மியடித்து, நடனமாடி சிறுதானியங்களே மீட்டெடுப்போம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் நாடு பெண்கள் இணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  லிட்வின் தலைமை வகித்தார். தமிழ்நாடு பென்கள் இணைப்புக்குழு பாலக்கோடு வட்டார தலைவர் ரங்கநாயகி வரவேற்பு உரையாற்றினார். களஞ்சிய பெண் விவசாயிகள் சங்க  மாநில தலைவி பொன்னுதாய் சிறப்புரையாற்றி பேசியதாவது, சிறுதானிய விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், சிறுதானியத்திற்க்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். 


சத்தீஸ்கர் அரசு போல மானாவாரி பயிரான, சிறுதானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு  ஊக்கத்தொகை வழங்க வேண்டும். நியாய விலைக்கடை . சத்துணவு மாணவ விடுதிகள் மருத்துவமன, அம்மா உணவகம். சிறைச்சாலை போன்ற அரசு உணவு வழங்கும் திட்டங்களில் சிறு தானிய உணவுகளை சேர்த்து வழங்க வேண்டும்.


சிறுதானியம் உற்பத்தி செய்யும் சிறு குறு விவசாயிகளின் விவசாய வேலைகளை மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை வாய்ப்பு திட்டமான, 100 நாள் வேலை திட்டத்தில் உள்ளடக்க வேண்டும். பஞ்சாயத்து அளவில் தானிய கிடங்குகள் அமைத்து விவசாய பொருட்களை அங்கு சேமித்து பராமரித்து பாதுகாத்து விநியோகம் செய்யவேண்டும் என பேசினர்.


 இதில் ஜெக்க சமுத்திரம் தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் கலில். தர்மபுரி மனித உரிமை ஆணைய உறுப்பிணர் செந்தில்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில்  பாலக்கோடு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு நிர்வாகி உமா நன்றியுரை ஆற்றினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies