Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் டி.டி.வி.தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு அமமுக வினர் சிறப்பு பூஜை .


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அம்மா மக்கள் கட்சியின்  நகர கழகம் சார்பில் அக்கட்சியின் நிறுவனர் டி.டி.வி தினகரன் அவர்களின் 61ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு  கோயில் மற்றும் மசூதியில் சிறப்பி வழிபாடு நகர செயலாளர் ஞானம் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு சிறுபான்மை மாவட்ட செயலாளர் மசியுல்லா முன்னிலை வகித்தார்.


திரெளபதி அம்மன் கோவில் மற்றும் மேல் தெருவில் உள்ள மசூதியில் அமமுக நிறுவனர்  டி.டி.வி தினகரன் அவர்களின் 61 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் தொழுகை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் ரகமத்துல்லா, அவைத் தலைவர் மூசா, மாவட்ட பிரதிநிதி நவாப்கான், ஒன்றிய துணை செயலாளர் மகேந்திரன், வார்டு செயலாளர்கள் ரங்கநாதன், உமர், சுபான் மற்றும் திரளான  கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies