Type Here to Get Search Results !

இரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து தொழிற்சாலை நடத்தும் திமுக பிரமுகர், கிராம மக்கள் குற்றச்சாட்டு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் (ம) ஒன்றியம் சி. டி. பெட்டம் ஊராட்சி (ம) சி. டி. பெட்டம் வருவாய் கிராமம் சர்வேஎண் 577/B ல் 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் ரயில் ரோடு இந்த ரோடு வழியாக சின்னக்கும்மனுர் கிராம பொதுமக்கள் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையாக காட்டுக்கு ஆடு மாடு ஓட்டி செல்லும் ரோடாகவும் பயன்படுத்தி வந்தார்கள்.


இதை சி. டி. பெட்டம் திமுகவை சேர்ந்த ஊராட்சி தலைவி உமா கணவர் துரை பாலக்கோடு மேற்கு ஒன்றிய பொருளாளராக இருப்பதாகவும், இவர் இரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து தார் தொடர்பான தொழிற்சாலை அமைத்துள்ளார், இவருக்கு ரயில்வே துறை அதிகாரிகள் மறைமுகமாக உதவிசெய்வதாகவும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு புகைப்பட ஆதாரத்தோடு புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என சின்னக்கும்மனுர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு கொடுத்தனர், அனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.


மேலும் புகைப்படங்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை மனு பெற இந்த லிங்கை பார்க்கவும். Download Files 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies