Type Here to Get Search Results !

92 புதிய வகுப்பறை கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி மன்றக் கட்டடங்கள், உணவு தானிய கிடங்குகள், நியாய விலை கடைகள், மகளிர் சுய உதவிக்குழு கட்டடங்கள் திறப்பு.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.13.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 92 புதிய கட்டங்களை காணொலி காட்சியின் வாயிலாக இன்று திறந்து வைத்தார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.13.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 92 புதிய வகுப்பறை கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி மன்றக் கட்டடங்கள், உணவு தானிய கிடங்குகள், நியாய விலை கடைகள், மகளிர் சுய உதவிக்குழு கட்டடங்கள் ஆகியவற்றை காணொலி காட்சியின் வாயிலாக இன்று (26.12.2023) திறந்து வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.12.2023) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 155.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறை கட்டடங்கள், மாநிலத்தின் 21 மாவட்டங்களில் 20.54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 கிராம ஊராட்சி செயலகக் கட்டடங்கள். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 24.39 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 102 ஊராட்சி மன்றக் கட்டடங்கள் மற்றும் 15.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.6.01 கோடி மதிப்பீட்டில் 51 புதிய அங்கன்வாடி மையங்களையும், ரூ.2.14 கோடி மதிப்பீட்டில் 9 புதிய ஊராட்சி மன்றக் கட்டடங்களையும், ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் 8 புதிய உணவு தானிய கிடங்குகளையும், ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் 16 நியாய விலை கடைகளையும், ரூ.9.60 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தினையும், ஒரு நியாய விலை கடைகளையும், ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் 7 புதிய வகுப்பறை கட்டடங்களையும் என மொத்தம் ரூ.13.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 92 புதிய கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.


இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மாதேமங்கலம் ஊராட்சியில் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தார்கள். இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் ஏமகுட்டியூர் நியாய விலைக்கடையினை இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறிந்து கேட்டறிந்தார்கள். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.எஸ்.பவித்ரா, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஆறுமுகம், உதவி பொறியாளர் திருமதி.சுகுணா, மாதேமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.ஆர்.சங்கர், துணைத்தலைவர் திருமதி.மகாலட்சுமி, வார்டு உறுப்பினர் திருமதி.கஸ்தூரி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies