தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் 4 ரோடு அருகில் அதிமுக வடக்கு ஒன்றியம் மற்றும் மாரண்டஅள்ளி நகர கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் கோவிந்தன், மாவட்ட கவுண்சிலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து 4 ரோடு அருகில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்பநகர செயலாளர் வெங்கடேசன், கிளை செயலாளர்கள் மணி, அனுமந்தன், காசி, ரமேஷ்குமார், மல்லேசன், வினோத், அரவிந்தன், ஜெயராமன், எஸ்தர், சரோஜா, மற்றும் கட்சி முன்னோடிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.