இதில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் சிவா, மகளிர் அணி மாவட்ட தலைவி சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடந்த மாதம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் பெண்களின் கௌரவத்திற்கும், ஏழைகளின் நலனுக்காகவும் பாடுபட்டு வரும் பாஜகவிற்க்கு மக்கள் வாக்களித்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் மாபெரும் வெற்றி கொடுத்துள்ளனர்.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் நாடெங்கிலும் கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனை தொடர்ந்து பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் நகர துணை தலைவர் ராமரு, நகர பொருளாளர் முனியப்பன் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஸ்ரீதேவி, நகர செயலாளர் நத்தகிரி, பெரியசாமி, ஒன்றிய பொதுச் செயலாளர் பெரியண்ணன், நகர பொது செயலாளர் முனிராஜ் உள்ளிட்ட ஏராளமான பாஜக கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

