Type Here to Get Search Results !

பாலக்கோடு திரௌபதியம்மன் கோவில் வளாகத்தில் 23-ம் ஆண்டு ஐயப்ப சுவாமிகள் கன்னிபூஜை நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் பாலக்கேடு திரௌபதியம்மன் கோவில் வளாகத்தில் 21-ம் ஆண்டு ஐயப்ப சுவாமிகள் கன்னிபூஜை  விழா குருசாமி சின்னராஜி' தலைமையில் நடைபெற்றது. அதிகாலை முதலே கணபதி பூஜையுடன்  தொடங்கிய இவ்விழாவில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களான பால், பன்னீர், திராட்சை, சந்தனம்,இளநீர்,நெய் உள்ளிட்ட திரவியங்களால்  சிறப்பு அபிஷேகம் செய்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு   மகாதீபாரதனை காட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து புதிதாக ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து செல்லும் 30 கன்னி சுவாமிகளுகக்கு  திருப்பதி குருசாமி, சுகுமார் குருசாமி  ஆகியோர் கன்னி பூஜை செய்து வைத்தனர். இதையடுத்து மேலதாளங்கள் முழங்க பஜனைகள்  நடைப்பெற்றது இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் மற்றும் ஐயப்ப குரு சுவாமிகள் சுரேஷ், சிலம்பசன் மற்றும் விஜி ஆகியோர் முன்னிலை வகித்து செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies