Type Here to Get Search Results !

2023 தமிழகத்தின் சிறந்த சமூக சேவை அமைப்பிற்கான விருது பெற்ற மை தருமபுரி அமைப்பினர்.


மை தருமபுரி சமூக சேவை அமைப்பு கடந்த பதினொன்று ஆண்டுகளாக தருமபுரி நகரில் மனிதநேயமிக்க சிறந்த சமூக சேவை செய்து வருகின்றனர். அவசர ரத்ததானம், உணவு சேவை, ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்தல், கல்வி சேவை, மாற்றுத்திறனாளிக்கு உதவுதல், பேரிடர் கால உதவி ஆகிய சேவைகளை சிறந்த முறையில் மனிதாபிமானத்துடன் சேவை அர்ப்பணித்துடன் செய்து வருகின்றனர். 

2023 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் சிறந்த சமூக சேவை அமைப்புக்கான விருதை மை தருமபுரி அமைப்பிற்கு மதுரை அறம் அறக்கட்டளை அமைப்பினர் சென்னை காமராஜர் அரங்கத்தில் வழங்கினர். இந்த விருதினை திரைப்பட இயக்குனர் திரு.பாக்கியராஜ், செய்தி வாசிப்பாளர் ஸ்ரீதரன் ஆகியோர் மை தருமபுரி அமைப்பிற்கு விருதை கொடுத்து கௌரவித்தனர். 


இந்த விருதினை மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் மதிப்புறு முனைவர் சதீஸ் குமார் ராஜா, சமூக சேவகர் தமிழ்செல்வன், சமூக சேவகர் மருத்துவர் முஹம்மத் ஜாபர் ஆகியோர் விருதை பெற்றுக் கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies