Type Here to Get Search Results !

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பென்னாகரம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் சார்பில், 1 லட்சம் மதிப்பான மற்றும் இரண்டு டன் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்.


கனமழையால் தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்கள் தொடர் மழையால் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து, வீட்டில் இருப்பவர்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். 

இதனால் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பென்னாகரம் ஜாமியா மஜித் சார்பில் வெள்ள பாதிப்பில் சிக்கி உள்ள மக்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை நிவாரணமாக வழங்கி உதவ தன்னார்வலர்கள் முன் வர வேண்டும் என பென்னாகரம் ஜாமியா மஸ்ஜித் முத்தவழி பி எம் தவுலத் பாஷா அழைப்பு விடுத்துள்ளனர். 

இந்நிலையில் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் அளிப்பீர் ஜும்லீபீர் கமிட்டி, யாரப் ஹஸ்ரத் கமிட்டி இணைந்து வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்களில் தண்ணீர் பாட்டில், பால் பொருட்கள், நாப்கின், பிஸ்கட், அரிசி, பருப்பு, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, தீப்பெட்டி, எண்ணெய், ரவை, கோதுமை மாவு சர்க்கரை போர்வை உள்ளிட்ட ஒரு லட்சம் 2 டன்  பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இந்த பொருட்களை லாரியின் மூலம், பிஎம் தவுலத் பாஷா தலைமையில் தூத்துக்குடி அனுப்பி வைத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies