Type Here to Get Search Results !

மாவட்ட மைய நூலக வாசகர் மற்றும் வட்டத்தின் பொறுப்பாளர் நியமனம் கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர்கள் நியமனக் கூட்டம்  அளவில் மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் (பொ.) திருமதி.தா.மாதேஸ்வரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் இரண்டாம் நிலை நூலகர் திரு.ந.ஆ.சுப்ரமணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.  மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் தலைவராக மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் மரு.இரா.செந்தில் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். துணைத் தலைவராக மாவட்ட கல்வி அலுவலர் (ப.நி.) திரு.பொன்முடி அவர்களையும், செயலாளராக முதல் நிலை நூலகர் திரு.இரா.மாதேஸ்வரன் அவர்களையும் நியமனம் செய்யப்பட்டது.  


கண்காணிப்பாளர் (ப.நி.) திரு.மணி அவர்களும், தலைமை ஆசிரியர், திரு.மா.பழனி அவர்களும், உதவிப் பேராசிரியர் திரு.கு.சிவப்பிரகாசம் அவர்களும், மாவட்ட நூலக அலுவலர் (ப.நி.) திரு.சி.இராஜேந்திரன் அவர்களும், கவிஞர் க.சி.தமிழ்தாசன் அவர்களும், பட்டதாரி ஆசிரியர் திரு.ஜெமுனிராஜ் அவர்களும், ஆசிரியை திருமதி ஹேமலதா அவர்களும், ஆசிரியை திருமதி ஜெலஜாரமணி அவர்களும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டனர்.  


இக்கூட்டத்தில் மாவட்ட மைய நூலகத்தின் வளர்ச்சிக்காவும், வாசகர்களின் தேவைகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டும், வாசிப்பு பழக்கத்தை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டும் வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.  


புதியதாக பொறுப்பேற்றுள்ள வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.  இக்கூட்டத்தின் நிறைவாக தலைமை ஆசிரியர் திரு.மா.பழனி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies