Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு முகப்புரை வாசிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இந்திய அரசியலமைப்பு முகப்புரை வாசிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேசிய அரசியலமைப்பு தினம் - 2023 முன்னிட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இந்திய அரசியலமைப்பு முகப்புரை வாசிப்பு நிகழ்ச்சி இன்று (24.11.2023) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் அரசியலமைப்பு முகப்புரையான இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச் சமுதாயமும், சமயச்சார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல், நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படி நிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும் தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும், உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசமைப்புப் பேரவையில், 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகியாகிய இன்று, ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம் எனும் அரசியலமைப்பு முகப்புரையினை வாசிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பின் தொடர்ந்து வாசித்தனர்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் திரு.அப்பல்ல நாயுடு இவப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண்மை இணை இயக்குநர் திரு.கிருஷ்ணன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திரு.யோகவிஸ்ணு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சு.இராமதாஸ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.மாது, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி.பாத்திமா, அலுவலக மேலாளர் திரு.ராஜசேகர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies