Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் வட மாநில பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட இருவர் கைது, முக்கிய குற்றவாளி தப்பி ஓட்டம்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் பாலியல் தொழில் நடைப்பெற்று வருவதாக மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதத்திற்க்கு இரகசிய தகவல் கிடைத்தது, அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுல் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது அண்ணா நகர் பகுதியில் சந்தேகபடும்படியாக நின்று கொண்டிருந்த வட மாநில பெண்னை விசாரித்ததில் முன்னுக்கு பின் பேசியதில் சந்தேகமடைந்த போலீசார் போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்று விசாரித்ததில் தான் கொல்கத்தா அருகே உள்ள மணிக்கபூரை சேர்ந்தவர் என்றும், கூலி வேலை தேடி வந்த என்னை குப்பு என்பவரின் மகள் ராஜாமணி (வயது. 65). கோயமுத்தூரை சேர்ந்த வீராசாமி (வயது. 43) மற்றும் சென்னை தாம்பரத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது. 56) ஆகியோர் அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் ஈடுபட வைத்ததாக தெரிவித்தார். 


இதையடுத்து அப்பெண்னை தொப்பூர் பெண்கள் காப்பகத்திற்க்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் அதனை தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து வீராசாமி, செல்வகுமார் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜாமணியை தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies