Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி பகுதிக்கு போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால் - தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி பகுதிகளில் இருந்து நாள்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், தினக்கூலிக்கு வேலைக்கு செல்பவர்கள்  என அனைத்து தரப்பினரும் காலை மாலை என அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நம்பியே பயணம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் மாரண்டஹள்ளிலிருந்து எக்காண்டஹள்ளி, நாமண்டஹள்ளி, பாளையம், ஆல்மாரப்பட்டி, கூலிகானூர் வழியாக பஞ்சப்பள்ளி நோக்கி செல்லும்  தனியார் பேருந்தில் அரசு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என உயிரை பணயம் வைத்து பல கிலோ மீட்டர் தூரம் வரை படிக்கட்டில் தொங்கியபடியே ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.

 

கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தினாலும்,அவ்வழியே செல்லுக்கூடிய அரசு பேருந்து அடிக்கடி பழுதடைந்து விடுவதால்  தனியார் பேருந்தில் இதுபோல் உயிரை பணையம் வைத்து படிக்கட்டில் தொங்கி செல்வதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 


எனவே மாவட்ட நிர்வாகம் கிராமப்புறங்களுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies