Type Here to Get Search Results !

காரிமங்கலம் திமுக கட்சி அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்ததற்க்கு மாவட்ட செயலாளருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி கவுன்சிலராக இருப்பவர் கார்த்திகேயன் இவருக்கு கடந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமை தேர்தலில் போட்டியிட சீட்டு வழங்காததால், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று மாரண்டஅள்ளி பேரூராட்ராட்சி கவுன்சிலராக உள்ளார், இதனால் கட்சி தலைமை இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து விலக்கி வைத்திருந்த நிலையில் இன்று இவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் கட்சியில் இனைத்துகொண்டது, ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்ததற்க்கு காரணமாக இருந்த திமுக மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்களை கவுன்சிலர் கார்த்திகேயன் நேரில் சந்தித்து பட்டாடை, மற்றும் மலர்மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் வக்கில் மணி, கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம், மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், மேற்கு  ஒன்றிய கழக  செயலாளர் பி.கே.அன்பழகன், மத்திய ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன், மாரண்டஅள்ளி நகர செயலாளர் மற்றும் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜோதிவேல்,  மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சிவக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் முனிராஜ், குழந்தைவேலு, புதூர் பழனிச்சாமி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies