Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டி டாஸ்மாக் கடையில் வாங்கிய சரக்கு பாட்டிலில் விஷப்பூச்சி, வைரல் விடியோவால் குடிமகன்கள் பீதி.


பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டி டாஸ்மாக் கடையில் வாங்கிய சரக்கு பாட்டிலில் விஷப்பூச்சி, சரக்கு அடித்தவருக்கு வாந்தி,பேதி சமூக வலைதளத்தில் பரவும் வைரல் வீடியோவால் மது பிரியர்கள் பீதி.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது, இந்த டாஸ்மாக் கடையில் தீபாவளியை முன்னிட்டு, நேற்று பிற்பகல் மூன்று இளைஞர்கள் மது வாங்கி அருந்தி உள்ளனர். 


இந்நிலையில் பாதி பாட்டில் காலியான பிறகு கவனித்தபோது மது பாட்டிலுக்குள், விஷ பூச்சி இறந்து கிடந்துள்ளது. இதனை தொடர்ந்து மது அருந்திய ஒருவருக்கு வாந்தி பேதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இது தொடர்பாக உடன் வந்தவர் டாஸ்மாக் கடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


டாஸ்மாக் ஊழியர்களிடமிருந்து எவ்வித பொறுப்பான பதிலும் கிடைக்காததால், மது பிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைதளத்தில் பரவி வைரலாகி வருவதை தொடர்ந்து, மது பிரியர்கள் பீதி அடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies